Home >
நிகழ்வுகள் >
நிறைவுற்ற நிகழ்வுகள் >
2025 >
ஆகஸ்டு
ஆகஸ்டு
நல்லாசிரியர் விருது வழங்கும் விழா 2025
தமிழ் முரசு, சிங்கப்பூர்த் தமிழாசிரியர் சங்கம், தமிழ்மொழி கற்றல் வளர்ச்சிக் குழு ஆகியவை இணைந்து வழங்கும் நல்லாசிரியர் விருது 2025, ஆகஸ்டு 30-ஆம் தேதி அன்று உமறுப்புலவர்
தமிழ்மொழி நிலையத்தில் இனிதே நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு காலசார, சமூக, இளையர்துறை, மனிதவளத் துணையமைச்சரும் தமிழ்மொழி
கற்றல் வளர்ச்சிக் குழுவின் தலைவருமாகிய திரு தினேஷ் வாசு தாஸ் வருகை புரிந்து சிறப்பித்திருந்தார்.
இந்நிகழ்ச்சியில் புத்தாக்கமும் படைப்பாக்கமும் கொண்ட கற்பித்தல் முறைகளைப் பயன்படுத்தி மாணவர்களைக் கற்றலில் ஈடுபடுத்தும் நான்கு ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டது. மேலும் ஓர் ஆசிரியருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதும் இன்னொரு ஆசிரியருக்கு தேசியக் கல்விக் கழகச் சிறந்த தமிழ்ப் பயிற்சியாசிரியர் விருதும் வழங்கப்பட்டன. விருது பெற்றவர்களுக்கு எங்களின் மனமார்ந்த நல்வாழ்த்துகள்!
