Home > நிகழ்வுகள் > நிறைவுற்ற நிகழ்வுகள் > 2025 > மே

மே

தமிழோடு இணைவோம்: அழகே! தமிழே! 2025

தமிழ்மொழி கற்றல் வளர்ச்சிக்குழுவின் முத்திரைத் திட்டமான ‘தமிழோடு இணைவோம்: அழகே! தமிழே!’ நிகழ்ச்சி இன்று இனிதே நடந்தேறியது.

வீட்டில் நடைபெறும் அன்றாட உரையாடல்களிலும் வழக்கமான நடவடிக்கைகளிலும் தமிழை இயல்பாகப் பயன்படுத்த உதவும் பயனுள்ள உத்திகளைப் பெற்றோர் அறிந்துகொள்வதற்கு இந்நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையத்தில் நடந்தேறிய இந்நிகழ்ச்சியில் தொடக்கநிலை மூன்றிலும் நான்கிலும் பயிலும் பிள்ளைகளும் அவர்களுடைய பெற்றோர்களும் கலந்துகொண்டு பயனடைந்தனர். 

பிள்ளைகளையும் பெற்றோர்களையும் தமிழ்மொழி சார்ந்த பலதரப்பட்ட நடவடிக்கைகளில் ஈடுபடச் செய்த இந்நிகழ்ச்சியை 2024-ஆம் ஆண்டு நல்லாசிரியர் விருது பெற்ற தமிழாசிரியர்கள் வழிநடத்தினார்கள்.

இந்நிகழ்ச்சியைப் பற்றிய தகவல்களை மாணவர்களுக்குத் தெரிவித்து அவர்களைக் கலந்துகொள்ள ஊக்குவித்த ஆசிரியர்களுக்கும் இந்நிகழ்ச்சியில் பங்குபெற்ற மாணவர்களுக்கும் அவர்களது பெற்றோர்களுக்கும் எங்களது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்.


Media Coverage:
Indian Beat S16 E13 544578 
https://www.facebook.com/share/v/1BhTa9N2ph/