Home >
நிகழ்வுகள் >
நிறைவுற்ற நிகழ்வுகள் >
2025 >
ஜூலை
ஜூலை
பாலர் பள்ளித் தமிழாசிரியர்களுக்குரிய பயிலரங்கு 2025
தமிழ்மொழி கற்றல் வளர்ச்சிக்குழுவின் ஏற்பாட்டில் பாலர் பள்ளித் தமிழாசிரியர்களுக்குரிய பயிலரங்கு, இன்று இனிதே நடைபெற்றது.
‘பாலர் பள்ளிப் பிள்ளைகளுக்கு அர்த்தமுள்ள வெளிப்புறக் கற்றல் நடவடிக்கைகளை வடிவமைத்தல்’ என்னும் கருப்பொருளில் முனைவர் காவேரி அவர்கள் (இளம்பருவக் கல்வித்துறை, எஸ். ஆர். நாதன் மனித மேம்பாட்டுப் பள்ளி, சிங்கப்பூர் சமூக அறிவியல் பல்கலைக்கழகம்) சிறப்புரையாற்றிக் கலந்துரையாடலை வழிநடத்தினார்.
கேலாங் ஈஸ்ட் பொது நூலகத்தில் நடந்தேறிய இப்பயலிரங்கை தலைசிறந்த பாலர் பள்ளித் தாய்மொழி ஆசிரியருக்கான விருது பெற்ற ஏழு ஆசிரியர்களும், நியமனம் பெற்ற ஆசிரியர்களும் வழிநடத்தினார்கள்.
இப்பயிலரங்கில் பாலர் பள்ளித் தமிழாசிரியர்களும் இளம்பருவ வளர்ச்சிக்கான தேசியக் கல்விக் கழக மாணவர்களும் கலந்துகொண்டு பயனடைந்துள்ளனர்.