Home > நிகழ்வுகள் > நிறைவுற்ற நிகழ்வுகள் > 2019 > ஏப்ரல்

ஏப்ரல்

நிலமடந்தை

4 ஏப்ரல் 2019
சிங்கப்பூர் இந்திய நுண்கலைக் கழகம்
• தமிழ்மொழி விழாவுக்குச் சிறப்பூட்டக் குழு நடனத்திற்கு ஏற்பாடு செய்தல்


மாகோ குடும்ப கதை சொல்லும் விழா

6 ஏப்ரல் 2019
ஏ கே டி கிரியேஷன்ஸ்
• சிறுவர்களும் பெற்றோர்களும் குடும்பமாகச் சேர்ந்து கதை சொல்லுதல்

• குடும்ப உறுப்பினர்களிடைய உள்ள பிணைப்பை வலுப்படுத்துவதோடு தமிழ் ஆர்வத்தையும் வளர்த்தல்

கவியும் நாட்டியமும்

6 ஏப்ரல் 2019
ஓம்கார் ஆர்ட்ஸ்
• தமிழ்க் கவிதைகளையும் பாடல்களையும் நாட்டியமாகப் படைக்கும் போட்டிக்கு ஏற்பாடு செய்தல்
• நடனத்தின்வழியே தமிழ்மொழிமீது ஆர்வத்தை வளர்த்தல்

இளவேனில் 2.0 தமிழ் மொழியும் செயற்கை நுண்ணறிவும்
7 ஏப்ரல் 2019
நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம்

• தமிழ்மொழியையும் செயற்கை நுண்ணறிவையும் ஒருங்கிணைக்கும் வழிமுறைகளை ஆராய்தல்
• செயற்கை நுண்ணறிவையும் இயந்திரத்துவழிக் கற்றலையும் இந்திய சமூகத்தினருக்குக் கொண்டு சேர்த்தல்
• இணையக் குற்றச்செயல்களைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துதல்
• பொறுப்புமிக்க இணையப் பயன்பாட்டைப்பற்றிப் பகிர்ந்துகொள்ளுதல்

‘அழகு தமிழ் பழகு’ 

14 ஏப்ரல் 2019

சிங்கப்பூர்த் தமிழர் இயக்கம்

இன்றைய சூழலில் தமிழரின் பண்பாடு வளர்கிறதா அல்லது தேய்கிறதா என்பதையொட்டிய ஒரு விவாத  மேடையை      உருவாக்குதல்  


‘எதிர்காலத் தொழில்நுட்பத்தில் தமிழ்’  
20 ஏப்ரல் 2019
அண்ணாமலைப் பல்கலைக்கழக முன்னாள் மாணவர்கள் சங்கம் 

உயர்நிலைப் பள்ளி, தொடக்கக் கல்லூரி மாணவர்கள்   பங்குகொண்டு தங்கள் ஆய்வினைப் படைக்கும் நிகழ்ச்சி 


'வண்ணத்தமிழ்’  
21 ஏப்ரல் 2019 
உறுமி மின்னிதழ்
  • பாலர் பள்ளி மாணவர்களுக்கான வண்ணம் தீட்டும் போட்டி

சொற்போர்  2019 

27 ஏப்ரல் 2019 
தமிழர் பேரவை

  • தொடக்கப்பள்ளி மாணவர்களிடையே தமிழில் விவாதிக்கும் திறனை வளர்த்தல்
  • மாணவர்களது விவாதத்திறன்களை மேம்படுத்துவதோடு பார்வையாளர்களைக் கவரும் விதத்தில் படைப்புகளைப்படைக்க ஒரு தளத்தை உருவாக்குதல் 

நிழல் 

28 ஏப்ரல் 2019 
 தத்வா

  • தமிழ்மொழி மாதத்தை முன்னிட்டு இந்திய நடனத்தை அரங்கேற்றுதல்