தமிழ்மொழி கற்றல்
வளர்ச்சிக் குழு
Home > நிகழ்வுகள் > 2021 > பெற்றோருக்கான பயிலரங்கு

பெற்றோருக்கான பயிலரங்கு

பெற்றோருக்கான பயிலரங்கு 


உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையம் தமிழ்மொழி கற்றல் வளர்ச்சிக் குழுவின் ஆதரவோடு, உயர்நிலை 1 முதல் தொடக்கக் கல்லூரி வரை படித்துக்கொண்டிருக்கும் பதின்மவயதினரின் (13 முதல் 18 வயதுவரை உள்ளவர்கள்) பெற்றோர்களுக்காக ஒரு பயிலரங்கை ஏற்பாடு செய்தது. 

பதின்மவயதுப் பிள்ளைகளின் வாழ்வில், பெற்றோர்களின் முக்கியக் கடமைகள்/பங்களிப்புகள்பற்றிப் பயிற்றுவிப்பாளர்கள் எடுத்துரைத்தனர். மேலும், தமிழ் இலக்கியங்களில் பெற்றோர்கள்பற்றிக் கூறப்பட்டுள்ள செய்திகளையும் பயிற்றுவிப்பாளர் சிறந்த முறையில் எடுத்துரைத்தார்.