Home >
நிகழ்வுகள் >
2020
2020
தேதி | நிகழ்வுகள் | நோக்கம் | ஏற்பாட்டாளர் |
---|---|---|---|
16 ஜனவரி 2020 | பண்பாட்டுக் கலைப்படைப்பு அனுபவ நிதி ஆதரவுத் திட்டத்தின் அறிமுக நிகழ்ச்சி | தமிழ் பயிலும் மாணவர்கள் பண்பாட்டுக் கலைகள் தொடர்பான கலைப்படைப்புகளைக் கண்டு ரசிக்க புதிய நிதித் திட்டம் அறிமுகப்படுத்துதல். தமிழ்மொழி மீதும் தமிழ்ப் பண்பாட்டின் மீதும் மாணவர்களுக்கு ஆர்வத்தைத் தூண்டுவதோடு சிங்கப்பூரில் தமிழ் பண்பாட்டுக் கலை நிகழ்ச்சிகளை ஆதரிப்பது இத்திட்டத்தின் நோக்கமாகும். | தமிழ் மொழி கற்றல் வளர்ச்சிக் குழு |
29 & 30 ஜூன் 2020 | நாடகவழி வாய்மொழிப் பயிலரங்கு | நிகழ்நிலைப் பயிலரங்கின்மூலம் நாடக உத்திகளைக்கொண்டு தங்களுடைய வாய்மொழித் திறனை எப்படி மேம்படுத்தலாம் என்பதை மாணவர்கள் கற்றுக்கொள்வார்கள். | AVANT நிறுவனத்தினர் |
1 – 3 ஜூலை 2020 | பொம்மைக்
கூத்து | தமிழ்ப் பாரம்பரியக் கதைகளின்மூலம் அறியப்படும் விழுமியங்களை ஒரு சுவாரஸ்யமான சூழலில் கற்றுக்கொள்வது. | AKT Creations நிறுவனத்தினர் |
4, 11 & 18 ஜூலை 2020 | திரையறை | தமிழ்க் குறும்படங்களைத் தயாரிப்பதற்கான நுட்பங்களை அறிந்துகொள்வதோடு, அவற்றைத் தயாரிப்பதற்கான தொழில்நுட்ப வசதிகளைப்பற்றியும் தெரிந்துகொள்வார்கள். | SITFE / Blacspicemedia நிறுவனத்தினர் |
27 – 30 ஜூலை | ஆசான் கலாவுடன் பறையிசை | தமிழரின் பாரம்பரிய இசைக்கருவியான ‘பறை’மூலம் தமிழ்ப் பண்பாட்டையும் மொழியையும் தமிழ்ச் சமூகத்திற்குக் கொண்டுசெல்வது இந்நிகழ்ச்சியின் நோக்கமாகும். | AKT Creations நிறுவனத்தினர் |
21– 24 ஜூலை | வாசி நேசி | மாணவர்களிடையே வாசித்தல் மீதான ஆர்வத்தை உண்டாக்குவதே இந்நிகழ்ச்சியின் முக்கிய நோக்கமாகும். கதைகள்மூலம் இந்நோக்கத்தை அடைவதோடு, மாணவர்கள் புதிய தமிழ்ச்
சொற்களையும் சொற்றொடர்களையும் அறிந்துகொள்வதற்கான வாய்ப்பும் அமைகிறது. | AKT Creations நிறுவனத்தினர் |
15 ஆகஸ்ட் 2020 | மழலைப் பாட்டு இசைவட்டு வெளியீடு | பாலர்பள்ளி மாணவர்களிடையே தமிழ்ப் பாட்டுகளைச்
சுவாரஸ்யமான முறையில் அறிமுகப்படுத்தி அவர்களை அவற்றைக் கற்றுக்கொண்டு பாடவைக்க
ஆர்வமூட்டுவதே இந்நிகழ்ச்சியின் நோக்கமாகும். இப்பாடல்கள் இசைவட்டில் மட்டுமில்லாமல்
YouTube தளத்திலும்
பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. | கலாமஞ்சரி நிறுவத்தினர் |