தமிழ்மொழி கற்றல்
வளர்ச்சிக் குழு

2019

2019 நிகழ்வு பட்டியல்

தேதி

நிகழ்வுகள்

நோக்கம்

ஏற்பாட்டாளர்

17 ஜனவரி 2019

கனி மணி செயலியின் அறிமுக விழா  

 • மாணவர்களிடையே தமிழ்நூல்  வாசிக்கும் ஆர்வத்தை அதிகரித்தல்
 • பிள்ளைகளிடையே வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவிக்கும் வண்ணம் பெற்றோர்களுக்கான ஒரு தளத்தை அறிமுகம் செய்தல் 

தமிழ்மொழி கற்றல் வளர்ச்சிக் குழு &

‘Grow Momentum’ நிறுவனத்தினர் 

 17 ஜனவரி 2019

மின்னிலக்க வழி கதை சொல்லுதல்

 • தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு மின்னிலக்கம் வழி கதைச்             சொல்லும் திட்டத்தை அறிமுகம் செய்தல்
 • தொடக்கப்பள்ளி மாணவர்களிடையே தமிழ்மொழி ஆளுமையும்  ஆர்வத்தையும் வளர்த்தல்

 ‘இளமைநிறுவனத்தினர் 

9 மார்ச்சு 2019

தமிழோடு விளையாடு 2019

 • மாணவர்களிடையே தமிழ்ப் புழக்கத்தை அதிகரித்தல் 
 • மாணவர்களிடத்தில் சொல்வதெழுதுதல் திறனையும் சொற்பொருள் திறனையும் வளர்க்க ஊக்குவித்தல் 

 மீடியகார்ப் நிறுவனத்தின் தமிழ்ச் செய்தி & நடப்பு விவகாரப் பிரிப்பு

 10 மார்ச்சு 2019

பார்வை 

 • உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்காக 'வைகறைப் பூக்கள்'                   என்னும்  உள்ளூர் நாவலையொட்டி அமைந்த இலக்கிய                  கருத்தரங்கை அறிமுகம் செய்தல்
 • மாணவர்களுக்கு நாவலை கேலிச்சித்திர வடிவில் வழங்குதல்    
 • நாவலில் இடம்பெற்ற சில காட்சிகளை நாடக வடிவில் காணவும் நடித்துக்காட்டவும் மாணவர்களைப் பயிற்றுவித்தல்             

நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம்  

28 - 29  மார்ச்சு 2019 

இருளின் ஒளி 

இந்திய பாரம்பரிய நிழற்பாவை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தல்  

ஏ கே டி கிரியேஷன்ஸ் 

31 மார்ச்சு 2019 

முத்தமிழ் விழா 

 • சிறுவர்களுக்கான மாறுவேடப் போட்டி, பேச்சுத் திறன் போட்டி,                  கதை  சொல்லும் போட்டி ஏற்பாடு செய்தல்
 • உள்ளூர் எழுத்தாளர்களுக்கு தமிழ்வேள் விருது வழங்குதல் 

சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம்  

4 ஏப்ரல் 2019 

நிலமடந்தை 

 • தமிழ் மொழி விழாவுக்குச் சிறப்பூட்ட குழு நடனத்திற்கு ஏற்பாடு   செய்தல்  

சிங்கப்பூர் இந்திய நுண்கலைக் கழகம்  

6 ஏப்ரல் 2019 

மாகோ குடும்ப   

கதைச் சொல்லும் விழா

 • சிறுவர்களும் பெற்றோர்களும் குடும்பமாகச் சேர்ந்து கதைச்          சொல்லுதல் 
 • குடும்ப உறுப்பினர்களிடைய உள்ள பிணைப்பை              வலுப்படுத்துவதோடு தமிழ் ஆர்வத்தையும் வளர்த்தல்

 ஏ கே டி கிரியேஷன்ஸ் 

 6  ஏப்ரல்  2019

கவியும் நாட்டியமும்

 • தமிழ்க் கவிதைகளையும் பாடல்களையும் நாட்டியமாகப்                    படைக்கும் போட்டியை ஏற்பாடு செய்தல்
 • நடனத்தின்வழியே தமிழ்மொழிமீது ஆர்வத்தை வளர்த்தல்

 ஓம்கார் ஆர்ட்ஸ்

7 ஏப்ரல் 2019 

இளவேனில் 2.0

தமிழ் மொழியும் செயற்கை நுண்ணறிவும்  

 • தமிழ் மொழியையும் செயற்கை நுண்ணறிவையும்          ஒருங்கிணைக்கும் வழிமுறைகளையும் ஆராய்தல்
 • செயற்கை நுண்ணறிவையும் இயந்திரத்துவழிக் கற்றலையும்                  இந்திய சமூகத்தினருக்குக் கொண்டு  சேர்த்தல்
 • இணையக் குற்றச்செயல்களைப்பற்றிய விழிப்புணர்வை              ஏற்படுத்துதல்
 • பொறுப்புமிக்க இணையப் பயன்பாட்டைப்பற்றிப்          பகிர்ந்துகொள்ளுதல்   

 நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம்

14 ஏப்ரல் 2019 

‘அழகு தமிழ் பழகு’ 

 • இன்றைய சூழலில் தமிழரின் பண்பாடு வளர்கிறதா அல்லது            தேய்கிறதா என்பதையொட்டிய ஒரு விவாத  மேடையை             உருவாக்குதல்  

 சிங்கப்பூர் தமிழர் இயக்கம்

 20 ஏப்ரல் 2019

‘எதிர்காலத் தொழில்நுட்பத்தில் தமிழ்’ 

 • உயர்நிலைப் பள்ளி மற்றும் தொடக்கக் கல்லூரி மாணவர்கள்   பங்குகொண்டு தங்கள் ஆய்வினைப் படைக்கும் நிகழ்ச்சி 

அண்ணாமலைப் பல்கலைக்கழக முன்னாள் மாணவர்கள் சங்கம் 

21 ஏப்ரல் 2019 

'வண்ணத்தமிழ்’ 

 • பாலர் பள்ளி மாணவர்களுக்கான வண்ணம் தீட்டும் போட்டி 

 உறுமி மின்னிதழ் 

 27 ஏப்ரல் 2019 

சொற்போர்  2019 

 • தொடக்கப்பள்ளி மாணவர்களிடையே தமிழில் விவாதிக்கும்                  திறனை வளர்த்தல்
 • மாணவர்களது விவாதத்திறன்களை மேம்படுத்துவதோடு பார்வையாளர்களைக் கவரும் விதத்தில் படைப்புகளைப்                        படைக்க ஒரு தளத்தை உருவாக்குதல் 

 தமிழர் பேரவை

28 ஏப்ரல் 2019 

நிழல் 

 • தமிழ்மொழி மாதத்தை முன்னிட்டு இந்திய நடனத்தை    அரங்கேற்றுதல்  

 தத்வா

4 மே 2019 

பாலர் பள்ளித் தமிழாசிரியர்களுக்கான
கலந்தாய்வரங்கம் 2019  

 • பாலர் பள்ளித் தமிழாசிரியர்களுக்கான  பணி மேம்பாட்டுத்                  தளத்தை உருவாக்குதல்
 • மகிழ்வூட்டும் கற்றல் கற்பித்தலுக்கான  உத்திமுறைகளைப்  பகிர்ந்துகொள்ளுதல்
 • பாலர் பள்ளித் தமிழாசிரியர்களுக்கான தொடர்பிணைப்புத்                 தளத்தை உருவாக்குதல் 

 தமிழ்மொழி கற்றல் வளர்ச்சிக் குழு

 31 மே 2019

காந்தாரி

வெனிஸ் வணிகன் 

 • காந்தாரி - மேடை நாடகத்தை, நாடக வசனப் படைப்பு என்னும் வித்தியாசமான உத்தியைக்கொண்டு மக்களுக்குப் படைத்தல்
 • வெனிஸ் வணிகன் - ஷெக்ஸ்பியர் நாடகத்தைத் தமிழில்  மொழிபெயர்த்தலும் படைத்தலும் 

 அவாண்ட் நாடகக் குழு

 29 ஜூன் 2019

தமிழோடு இணைவோம்; அழகே! தமிழே! 2019 

 • பிள்ளைகளையும் பெற்றோர்களையும் பல்வேறு ஆர்வமூட்டும்        தமிழ்மொழி நடவடிக்கைகளிலும் பண்பாடு தொடர்பான நடவடிக்கைகளிலும் ஈடுபடுத்துதல்
 • பெற்றோர்கள் தமிழ்மொழியைத் தங்கள் அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்த ஊக்குவித்தல் 

தமிழ்மொழி கற்றல் வளர்ச்சிக் குழு

2 – 3  ஆகஸ்டு 2019

‘சங்கே முழங்கு’ 

 • ஆடல், பாடல், நாடகம் போன்ற  பல அங்கங்கள்வழியே தமிழ்க்    கலையையும், பண்பாட்டையும் மக்களுக்குக் கொண்டு  சேர்த்தல்

 தேசிய பல்கலைக்கழகம் 

24 ஆகஸ்ட்டு 2019   

தாய்மொழிகளின்
கருத்தரங்கு 2019

 • 8-ஆவது ஆண்டில் கால்பதிக்கும் தாய்மொழிகளின் கருத்தரங்கானது       பாலர் பள்ளிகள், பள்ளிகள், சமூக அமைப்புகள் ஆகியவற்றோடு            தொடர் பங்காளித்துவத்தில் ஒன்றிணைந்து நமது பிள்ளைகளைத்    துடிப்பான மாணவர்களாகவும் தாய்மொழியை ஆக்கபூர்வமாகப் பயன்படுத்துவோராகவும் ஊக்குவித்தல்
 • இந்தத் தொடர் முயற்சியின்மூலம் மாணவர்களின் அன்றாட      வாழ்க்கையில் தமிழ்மொழியின் பயன்பாட்டை வலியுறுத்துவதோடு வகுப்புக்கு அப்பாலும் தமிழ்மொழியைப் பயன்படுத்துவதை       ஊக்குவித்தல்   

கல்வி அமைச்சு 

31 ஆகஸ்ட்டு 2019 

நல்லாசிரியர் விருது 2019

 • தமிழாசிரியர்களின் ஈடு இணையற்ற பணியையும் தன்னலமற்ற சேவையையும் அங்கீகரித்தல்

தமிழ்மொழி கற்றல் வளர்ச்சிக் குழு, தமிழ் முரசு, சிங்கப்பூர்த் தமிழராசிரியர் சங்கம்,

27 – 28 செப்டம்பர் 2019 

கரகம் 

 • நாட்டுப்புறக் கலையான கரகாட்டத்தைப் பற்றிய விழிப்புணர்வை  மக்களிடையே ஏற்படுத்துதல்
 • நம் இந்தியச் சமூகத்தினரிடையே இக்கலையை வளர்க்கவும்        ஆதரிக்கவும் ஊக்குவித்தல்  

ஏ கே டி கிரியேஷன்ஸ் 

12 அக்டோபர் 2019  

மாணவர் முழக்கம் 2019 

 • தொடக்கப்பள்ளி மாணவர்களின் தன்னம்பிக்கையை  அதிகரிக்கும்வண்ணம் அவர்களின் தமிழ் உச்சரிப்பு, தமிழில்               சிந்தித்து உரையாடும் திறன், மேடை படைப்பாக்கம், போன்ற         பல்வகைத் திறன்களை ஊக்குவித்தல் 

 தமிழர் பேரவை 

13   அக்டோபர் 2019  

 கம்பன் விழா 2019

 • கவிச்சக்கரவர்த்தி கம்பரின் கவிதைகளை மாணவர்களிடையே         அறிமுகம் செய்தல்
 • மாணவர்களிடத்தில் கம்பராமாயணம் நாடகத்தின் மூலம் நட்பு, சகோதரர்களிடத்தில் அன்பு, வாய்மை, பெற்றோரிடத்தில் அன்பு           முதலிய உறவுமுறை சார்ந்த விழுமியங்களை வலியுறுத்துதல்
 • நாட்டியம், நாடகம்பட்டிமன்றம், புதிர்ப் போட்டி, சிறப்புரை                   போன்ற பல்சுவை அங்கங்களின்மூலம் பள்ளி மாணவர்களிடையே    மொழியாற்றலை மேம்படுத்துவதோடு அறிவாற்றலையும்              அதிகரித்தல் 

சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம்  

 19 அக்டோபர் 2019

ஆடையின் சமுத்திரம்  

 • சிங்கப்பூரில் சேலைகளின் தோற்றம் பயன்பாடு உள்ளிட்ட               வரலாற்றை அறிமுகப்படுத்துதல்
 • பல்வேறு சமூகத்தினரின் சேலை பயன்பாடு குறித்த தகவல்களைப் பகிர்ந்துகொள்ளுதல்  

SITFE

 8 நவம்பர் 2019

தமிழ்ச்சுடர்  2019 

 • தமிழ்மொழித் துறையில் சிறந்து விளங்கியவர்களைக் கௌரவிக்கும்          ஒரு விருது விழாவினை ஏற்பாடு செய்தல் 

 மீடியகார்ப் நிறுவனத்தின் தமிழ்ச் செய்தி & 
நடப்பு விவகாரப் பிரிப்பு

 12 டிசம்பர் 2019

தமிழில் ஒரு சுற்றுலா 2019 

 • மாணவர்களிடையே தமிழ்மொழி மீதான ஆர்வத்தை வளர்த்தல் 
 • வகுப்பறைச் சூழலைத் தவிர்த்து மாணவர்களின் கற்றலை          விரிவுப்படுத்த ஒரு தளத்தை உருவாக்குதல்
 • மாணவர்கள் வகுப்பறையைத் தாண்டி வீடுகளிலும் தமிழில் பேச ஊக்குவித்தல்

 தமிழ்மொழி கற்றல் வளர்ச்சிக் குழு