தேதி | நிகழ்வுகள் | நோக்கம் | ஏற்பாட்டாளர் |
---|
16 ஜனவரி 2018
| காண்போம்! கற்போம்! | - மாணவர்கள் தென் ஆசிய மற்றும் இந்திய சமூகத்தின் வரலாற்றையும் தென்கிழக்காசிய சுற்றிடங்களைப் பற்றியும் கற்றுக்கொள்ள அவர்களுக்கு ஆர்வம் மிகுந்த சூழலை ஏற்படுத்திக்கொடுத்தல்
| இந்திய மரபுடைமை நிலையம்
|
8 மார்ச் 2018 | தாய்மொழியில் புத்தாக்கக் கற்றல் கற்பித்தலுக்கான கலந்தாய்வரங்கம் 2018
| - புத்தாக்க முறையில் தாய்மொழி கற்றல் கற்பித்தலை நிகழ்த்த உதவும் உத்திமுறைகளை ஆசிரியர்களுக்குப் அறிமுகப்படுத்துதல்.
- ஆசிரியர்கள் கற்றவற்றைக்கொண்டு வகுப்பறையில் மகிழ்வூட்டும் கற்றல் நிகழ வகைசெய்வார்கள்.
| தேசியக் கல்விக் கழகம் |
24 மார்ச் 2018 | தமிழோடு விளையாடு | - மாணவர்களிடையே தமிழ்ப் புழக்கத்தை அதிகரித்தல்.
- தமிழைப் பிழையின்றி எழுத ஊக்குவித்தல்.
| மீடியகார்ப் நிறுவனத்தின் தமிழ்ச் செய்தி & நடப்பு விவகாரப் பிரிவு |
6 ஏப்ரல் 2018 | E5 குழுமத் தமிழ்மொழி விழா | - மாணவர்களுக்கு அவர்களது மரபையும், பண்பாட்டையும் அறிந்து போற்றச்செய்தல்
- மாணவர்களது திறன்களைக் வெளிக்கொணர்தல்.
- தமிழ்மொழிக் கற்றலில் மகிழ்வூட்டும் கற்றலை வலியுறுத்துதல்.
.
| E5 குழுமப் பள்ளிகள் |
7 ஏப்ரல் 2018 | முத்தமிழ் விழா | - மாணவர்களிடையே பேச்சுத்தமிழை ஊக்குவித்தல்.
- மாணவர்களது மொழிவளத்தை மேம்படுத்துதல்.
- தமிழ்மொழி இலக்கியத்தின் மீது ஆர்வத்தை ஏற்படுத்துதல்
- அவர்களைப் புத்தாக்கம் நிறைந்த படைப்பாளர்களாக உருவாக்குதல்.
| சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம் |
21 ஏப்ரல் 2018 | உரைக்களம் | - தொழில்நுட்பம் கலந்த படைப்புகள் மூலம் சிறப்பான கருத்துகளை முன்வைத்தல்.
- தமிழைச் சரளமாகப் பேசும் மாணவர்களை உருவாக்குதல்.
- ஆழமாகச் சிந்தித்துப் புதுமையான விஷயங்களைக் கற்பிக்கும் ஒரு தளத்தை அமைத்துக் கொடுத்தல்.
| தமிழர் பேரவை |
19 மே 2018 | தமிழோடு இணைவோம்; அழகே! தமிழே! | - பிள்ளைகளும் பெற்றோர்களும் தமிழ்மொழியை அர்த்தமுள்ள வகையில் ஆர்வத்தோடும் உற்சாகத்தோடும் கலந்துகொள்ளுதல்
- பெற்றோர்கள் தமிழ்மொழியைத் தங்கள் அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்த ஊக்குவித்தல்.
- பிள்ளைகளையும் பெற்றோர்களையும் பல்வேறு ஆர்வமூட்டும் தமிழ்மொழி நடவடிக்கைகளிலும் பண்பாட்டுத் தொடர்பான நடவடிக்கைகளிலும் ஈடுபடுத்துதல்.
| தமிழ்மொழி கற்றல் வளர்ச்சிக் குழு |
30 ஜூன் 2018 | பாலர் பள்ளித் தமிழாசிரியர்களுக்கான கலந்தாய்வரங்கம் 2018 | - பாலர் பள்ளித் தமிழாசிரியர்கள் மகிழ்வூட்டும் கற்றல் கற்பித்தலின் வாயிலாக மரபையும் பண்பாட்டையும் வலியுறுத்துவது எப்படி என்பதை அறிந்துகொள்ளுதல்.
| தமிழ்மொழி கற்றல் வளர்ச்சிக் குழு |
7 பிப்ரவரி - 18 ஜூலை 2018 | "ஆஹா! இன்பமான கற்றல் பயணம்" | - ரிவர் சஃபாரிக்குக் கற்றல் பயணத்தை மேற்கொள்ளப் பாலர் பள்ளித் தமிழாசிரியர்களுக்குத் தேவையான பயிற்சியை அளித்தல்
- படித்தலுக்கான துணைப் பயிற்றுகருவிகளைப் பயன்படுத்திச் சிறுவர்களைத் தமிழ்மொழி கற்றலில் ஈடுபடுத்துதல்.
- பாலர் பள்ளிக்குச் செல்லும் தங்களது பிள்ளைகளுடன் பெற்றோருக்குத் தமிழ்மொழியில் உரையாடும் இன்பமான வாய்ப்புகளை வழங்குதல்.
| தமிழ்மொழி கற்றல் வளர்ச்சிக் குழு மற்றும் வன உயிர் காப்பகம், சிங்கப்பூர் |
21 ஜூலை 2018 | கம்பன் விழா
| - நாட்டியம், நாடகம், பட்டிமன்றம், புதிர்ப் போட்டி, சிறப்புரை போன்ற பல்சுவை அங்கங்களின் மூலம் பள்ளி மாணவர்களிடையே கம்ப
| சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம் |
25 ஆகஸ்ட் 2018 | நல்லாசிரியர் விருது 2018 | - ஆசிரியர்களின் ஈடு இணையற்ற பணியையும் தன்னலமற்ற சேவையையும் அங்கீகரித்தல்.
| தமிழ் முரசு, சிங்கப்பூர்த் தமிழாசிரியர் சங்கம், தமிழ்மொழி கற்றல் வளர்ச்சிக் குழு |
7- 8 செப்டம்பர் 2018
| உலகத் தமிழாசிரியர் மாநாடு 2018 | - பல்வேறு நாடுகளிலிருந்து வரும் பேராளர்கள் தமிழ்மொழியைப்பற்றியும் கற்றல் கற்பித்தல் முறைகளைப்பற்றியும் பல்வேறு பகிர்வுகளில் பகிர்ந்துகொள்ளும் தளத்தை உருவாக்குதல்
| உலகத் தமிழாசிரியர் பேரவை, சிங்கப்பூர்த் தமிழாசிரியர் சங்கம், சிங்கப்பூர் சமூக அறிவியல் பல்கலைக்கழகம் |