நினைவுமலர் வெளியீடு 2021
நினைவுமலர் வெளியீடு 2021
தமிழ்மொழி கற்றல் வளர்ச்சிக் குழுவின் பதினைந்தாம் ஆண்டு நிறைவை நினைவுகூரும் வகையில் நினைவுமலர் ஒன்று வெளியீடு கண்டது. தொடர்பு, தகவல் அமைச்சரும், வர்த்தக உறவுகளுக்குப் பொறுப்பு வகிக்கும் அமைச்சருமான, திரு எஸ் ஈஸ்வரன் இன்று நடைபெற்ற நினைவுமலர் வெளியீட்டு விழாவுக்குச் சிறப்பு விருந்தினராக வருகைப் புரிந்து சிறப்பித்தார்.
கடந்த 15 ஆண்டுகளாகத் தமிழ்மொழி கற்றல் வளர்ச்சிக் குழு பள்ளிகளிலும் சமூகத்திலும் ஆற்றிய சீரிய பணியின் பயணத்தை வரலாற்றில் தடம் பதிக்க எடுத்த முயற்சியே இந்த நினைவுமலர். தமிழ்ச் சமூகத்துடனும் பங்காளர்களுடனும் இணைந்து தமிழ்மொழி கற்றல் வளர்ச்சிக்காக ஆற்றிய பணியைப் பதிவு செய்ய உதவிக்கரம் நீட்டிய அனைத்துத் தமிழ் நெஞ்சங்களுக்கும் இத்தருணத்தில் தமிழ்மொழி கற்றல் வளர்ச்சிச் செயற்குழு இரு கரம் கூப்பி நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறது.
இந்த நினைவுமலரின் மின் வடிவத்தை நீங்கள் இந்த இணையத்தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். அதோடு, எல்லாத் தமிழ் அமைப்புகளுக்கும் தமிழாசிரியர்களுக்கும் இந்த நினைவுமலர் வழங்கப்படும். மேலும், தமிழ் கற்பிக்கப்படும் ஒவ்வொரு பள்ளிகளுக்கும் இந்நினைவுமலர் அனுப்பிவைக்கப்படும்.