தமிழ்மொழி கற்றல்
வளர்ச்சிக் குழு
Home > நிகழ்வுகள் > 2021 > தலைசிறந்த பாலர் பள்ளித் தாய்மொழி ஆசிரியருக்கான விருது 2020

தலைசிறந்த பாலர் பள்ளித் தாய்மொழி ஆசிரியருக்கான விருது 2020

தலைசிறந்த பாலர் பள்ளித் தாய்மொழி ஆசிரியருக்கான விருது 2020 (தமிழ்மொழி)


பாலர் பள்ளித் தமிழாசிரியர்களின் உன்னதப் பணியை அங்கீகரிக்கும் உயரிய விருதாகத்  தலைசிறந்த பாலர் பள்ளித் தாய்மொழி ஆசிரியருக்கான விருது  கருதப் பெறுகின்றது. தமிழ்மொழியின்பால் பிள்ளைகளுக்கு ஈடுபாட்டையும் ஆர்வத்தையும் ஊட்டிப்   புத்துணர்ச்சியுடன் கற்பிப்பதற்காகவும்,  பாலர் பள்ளிகளில் தாய்மொழிகள் மீதான  பற்றை ஊக்குவிக்கும் தனித்துவமிக்க திறன் கொண்டமைக்காகவும்  இந்த  உயரிய விருது ஆசிரியர்களுக்கு வழங்கப்படுகிறது. வருடாந்திர நிகழவான தாய்மொழிகளின் கருத்தரங்கு  சென்ற ஆண்டு சவால் மிகுந்த கோவிட்- 19 சூழலால் மெய்நிகர் நிகழ்வானது. ஆகவே, சென்ற ஆண்டு   தலைசிறந்த பாலர் பள்ளித் தாய்மொழி ஆசிரியருக்கான விருது நிகழ்ச்சி தாய்மொழிகளின் கருத்தரங்கில் நடைபெறவில்லை. மாறாக, இந்த விருது நிகழ்ச்சி அந்தந்த கற்றல் வளர்ச்சிக் குழுவால் ஏற்பாடு செய்து நடத்தப்பெற்றது. ஆகவே, இந்தத்  தலைசிறந்த பாலர் பள்ளி தாய்மொழி ஆசிரியருக்கான விருது 2020 (தமிழ்மொழி) நிகழ்ச்சி மெய்நிகர் வாயிலாக உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையத்தில்  சிறப்பாக நடைபெற்றது.