தமிழ்மொழி கற்றல்
வளர்ச்சிக் குழு
Home > நிகழ்வுகள் > 2017 > தமிழ்த் தூதர்கள்

தமிழ்த் தூதர்கள்

தமிழ்த் தூதர்கள் – உயர்நிலை மாணவர்களுக்கான புதிர்ப் போட்டி

இவ்வாண்டு, முதன்முறையாக அறிமுகப்படுத்தப்பட்டு நடத்தப்பட்ட இப்போட்டி ‘அமேஸிங் ரேஸ்’ முறையில் மிகச் சிறப்பாக நடந்தேறியது. ஒவ்வொரு பள்ளியிலிருந்தும் ஐவர் கொண்ட குழு கலந்துகொண்டது. ஒவ்வொரு குழுவுடனும் ஓர் உள்ளூர்ப் பிரபலம் இணைந்து, கொடுக்கப்பட்ட உதவிக்குறிப்புகளைக் கொண்டு சிங்கப்பூரின் சிறப்புமிக்க இடங்களைக் கண்டுபிடிக்கவேண்டும். இதன்வழி, அவர்கள் தமிழர் மரபையும் கலாசாரத்தையும் கற்றுக்கொண்டதோடு சிங்கப்பூர் வரலாற்றையும் கற்றுக்கொண்டார்கள். 

படப்பிடிப்புக் குழுவின்முன் பல நடவடிக்கைகளில் ஈடுபட்டது மாணவர்களுக்கு ஒரு புதிய அனுபவமாக இருந்தது. மாணவர்களின் கருத்துப்பரிமாற்றத் திறன்களும் நேர நிர்வாகத் திறனும் மேம்பட்டன. மேலும் மாணவர்கள் மன உளைச்சலைத் தரக்கூடிய சூழல்களைச் சமாளிக்கவும் கற்றுக்கொண்டனர். அவர்களுக்கு இந்த அனுபவம் பயனுள்ளதாக அமைந்திருந்தது.