தமிழ்மொழி கற்றல்
வளர்ச்சிக் குழு
Home > நிகழ்வுகள் > 2017 >  நவரச மேடை 2017

 நவரச மேடை 2017

நவரச மேடை 2017

போட்டிகள்

தொடக்கநிலை 1 & 2 – பொருளைக் காட்டிப் பேசுதல், தொடக்கநிலை 3 & 4 – பாத்திரமேற்று நடித்தல், தொடக்கநிலை 5 & 6 – பிரபலத்தைப் பேட்டி காணுதல்

ஒவ்வொரு பள்ளியிலிருந்தும் ஒவ்வொரு நிலைக்கு இரண்டு மாணவர்கள் கலந்துகொண்டனர். இப்படிப்பட்ட போட்டிகளில் மாணவர்கள் தனிப் போட்டியாளர்களாகப் பங்குபெறுவது வழக்கம். ஆனால், இந்தப் போட்டிகளில் மாணவர்கள் இணையாளராகப் பங்குபெற்றது மட்டுமல்லாமல், தங்களுடைய பேச்சுவழிக் கருத்துப்பரிமாற்றத் திறனையும் வெளிப்படுத்தினார்கள். அவ்வகையில் இந்தப் போட்டி வித்தியாசமானதாக அமைந்தது.

இந்தப் போட்டி போட்டியாளர்களை மட்டுமில்லாமல் பார்வையாளர்களையும் ஈடுபடுத்தியது. போட்டியாளர்கள் சரளமாகப் பேசும் திறனையும்  தன்னம்பிக்கையையும் இப்போட்டிகளின் வழியாக வளர்த்துக்கொண்டார்கள். பார்வையாளர்கள் போட்டியில் பங்குபெற்றவர்களிடமிருந்து கற்றுக்கொண்டார்கள். போட்டியின் இடையிடையே நடத்தப்பட்ட பேசுதல், பாடல்கள் பாடும் நடவடிக்கைகள் ஆகியவை பார்வையாளர்களை ஈர்த்தன. இறுதியில், போட்டியின் நடுவர்கள் வழங்கிய கருத்துத் தெரிவிப்பு மாணவர்கள் தங்களுடைய பேச்சுவழிக் கருத்துப்பரிமாற்றத் திறனை மேம்படுத்த பேருதவியாய் அமைந்தது.