தமிழ்மொழி கற்றல்
வளர்ச்சிக் குழு
Home > நிகழ்வுகள் > 2017 > நல்லாசிரியர் விருது 2017

நல்லாசிரியர் விருது 2017

தமிழ்முரசு நாளிதழுடன் சிங்கப்பூர்த் தமிழாசிரியர் சங்கமும், கல்வி அமைச்சின் தமிழ்மொழி கற்றல் வளர்ச்சிக் குழுவும் இணைந்து ஆசிரியர் தினத்தை முன்னிட்டு சென்ற ஆண்டு செப்டம்பர் 2ஆம் தேதி உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையத்தில் நல்லாசிரியர் விருது வழங்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது.

ஆண்டுதோறும் வழங்கப்படும் இந்த விருதைத் தொடக்கப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி மற்றும் தொடக்கக்கல்லூரிகளில் தமிழ்மொழியிலும் தமிழ்மொழி கற்பித்தலிலும் சிறப்பாகப் பங்காற்றிய ஆசிரியர்கள் பெற்றுக்கொண்டனர்.

வெவ்வேறு பிரிவுகளில் மொத்தம் பத்து விருதுகள் வழங்கப்பட்டன. அவற்றுள் தேசியக் கல்விக் கழகத்தில் தமிழ் ஆசிரியருக்கான பயிற்சி பெறும் ஆசிரியர்களுள் சிறந்த பயிற்சி ஆசிரியருக்கு விருது வழங்கப்பட்டது. முந்தைய ஆண்டுகளைப்போல் இந்த ஆண்டும் தமிழ்மொழிக் கற்பித்தலில் பெரும் பங்காற்றியுள்ள மூன்று ஓய்வுபெற்ற தமிழாசிரியர்களுக்கும் வாழ்நாள் சாதனையாளர் விருதுகள் வழங்கப்பட்டன.

கல்வி அமைச்சரும் (பள்ளிகள்) இரண்டாம் போக்குவரத்து அமைச்சருமான இங் சீ மெங் விருதுகளை வழங்கி கௌரவித்தார். செம்பவாங் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரும் தலைவருமான திரு விக்ரம் நாயரும் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சிறப்பித்தார்.