பாலர் பள்ளித் தமிழாசிரியர்களுக்குரிய பயிலரங்கு 2021
பாலர் பள்ளித் தமிழாசிரியர்களுக்குரிய பயிலரங்கு 2021
தமிழ்மொழி கற்றல் வளர்ச்சிக் குழுவின் ஏற்பாட்டில் ‘பிள்ளைகளின் கற்றல் தேவைகளுக்கு ஏற்பத் தமிழ்ப்பாடங்களை வடிவமைத்தல்’ என்னும் பயிலரங்கு மே மாதம், 22-ஆம் தேதி, சனிக்கிழமையன்று இனிதே நடைபெற்றது. பாலர்பள்ளிப் பிள்ளைகளுக்கு மகிழ்ச்சி நிறைந்த சூழலில் தமிழ்மொழியைக் கற்பிக்க வழிமுறைகளை அறிந்துகொள்ள வேண்டும் என்னும் ஆர்வத்தோடு இப்பயிலரங்கில் சுமார் 80 பாலர்பள்ளித் தமிழாசிரியர்கள் பங்கேற்றனர். ஒவ்வொரு பிள்ளையின் தேவைக்கும் திறனுக்கும் விருப்பத்திற்கும் கற்றல் பாணிக்கும் ஏற்றவாறு தமிழ்ப்பாடங்களை எவ்வாறு வடிவமைப்பது என்பதைத் தெரிந்துகொள்வதற்கும் கலந்துரையாடித் தங்கள் கருத்துகளைப் பகிர்ந்துகொள்வதற்கும் இப்பயிலரங்கு பாலர்பள்ளித் தமிழாசிரியர்களுக்கு நல்ல தளமாக அமைந்தது.