தமிழ்மொழி கற்றல்
வளர்ச்சிக் குழு
Home > நிகழ்வுகள் > 2018 > உரைக்களம்

உரைக்களம்

உரைக்களம்

தமிழ்மொழி கற்றல் வளர்ச்சிக் குழுவின் ஆதரவில் தமிழர் பேரவை ‘உரைக்களம்’ என்னும் தமிழ் படைப்புப் போட்டிக்கு ஏற்பாடு செய்திருந்தது. இப்போட்டி தொடக்கநிலை மற்றும் உயர்நிலை மாணவர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தொழில்நுட்பம் கலந்த படைப்புகள் மூலம் சிறப்பான கருத்துகளை முன்வைப்பதோடு, தமிழைச் சரளமாகப் பேசும் மாணவர்களை உருவாக்கவும் ஆழமாகச் சிந்தித்துப் புதுமையான விஷயங்களைக் கற்பிக்கும் ஒரு தளத்தை அமைத்துக் கொடுப்பதும் இந்தப் போட்டியின் நோக்கங்களாகும்.   இப்போட்டி கடந்த பிப்ரவரி மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரை நடத்தப்பட்டது. இறுதிச்சுற்று ஏப்ரல் மாதம் 21 ஆம் தேதியன்று, MDIS அரங்கத்தில் நடைபெற்றது. செம்பவாங் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் திரு விக்ரம் நாயர், சிறப்பு விருந்தினராக வருகை புரிந்திருந்திருந்தார்.