தமிழ்மொழி கற்றல்
வளர்ச்சிக் குழு
Home > நிகழ்வுகள் > 2018 > முத்தமிழ் விழா

முத்தமிழ் விழா

முத்தமிழ் விழா

தமிழ்மொழி கற்றல் வளர்ச்சிக் குழுவின் ஆதரவில் சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம் முத்தமிழ் விழாவிற்கு இவ்வாண்டு ஏப்ரல் மாதத்தில் ஏற்பாடு செய்திருந்தது. மாணவர்களிடையே பேச்சுத்தமிழை ஊக்குவிப்பதும், அவர்களது மொழிவளத்தை மேம்படுத்துவதும், தமிழ்மொழி இலக்கியத்தின் மீது ஆர்வத்தை ஏற்படுத்தி அவர்களை புத்தாக்கம் நிறைந்த படைப்பாளர்களாக உருவாக்குவதே இந்நிகழ்வின் முக்கிய நோக்கங்களாகும். முத்தமிழ் விழாவில் பாலர் கல்வி முதல் உயர் கல்வி பயிலும் மாணவர்களுக்காக பலதரப்பட்ட போட்டிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.