தமிழ்மொழி கற்றல்
வளர்ச்சிக் குழு
Home > நிகழ்வுகள் > 2018 > நல்லாசிரியர் விருது 2018

நல்லாசிரியர் விருது 2018

நல்லாசிரியர் விருது 2018

உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையத்தில், நல்லாசிரியர் விருது வழங்கும் நிகழ்ச்சி மாணவர்களின் கலைநிகழ்ச்சியோடு இனிதே நடந்தேறியது. ஆசிரியர்களின் ஈடு இணையற்ற பணியையும் தன்னலமற்ற சேவையையும் அங்கீகரிக்கும் வண்ணம், தமிழ்மொழி கற்றல் வளர்ச்சிக் குழுவும் தமிழ் முரசும் சிங்கப்பூர்த் தமிழாசிரியர் சங்கமும் இணைந்து இவ்விருது வழங்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தன. இந்நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராகக் குமாரி இந்திராணி ராஜா கலந்துகொண்டார். கற்றல் துறையில் நீண்ட காலச்சேவையை அங்கீகரிக்கும் வகையில், திரு க. முத்து மாணிக்கம், திரு ர. துரை மாணிக்கம், திருமதி பூபதி ஆகிய மூத்த தமிழாசிரியர்கள் வாழ்நாள் சாதனையாளர் விருதைப் பெற்றனர். இவர்களுடன் தொடக்கநிலை, உயர்நிலை/தொடக்கக்கல்லூரி, பயிற்சி ஆசிரியர் பிரிவுகள் என மொத்தம் 10 பேருக்கு விருது வழங்கப்பட்டது.