பாலர் பள்ளித் தமிழாசிரியர்களுக்கான கலந்தாய்வரங்கம் 2018
பாலர் பள்ளித் தமிழாசிரியர்களுக்கான கலந்தாய்வரங்கம் 2018
தமிழ்மொழி கற்றல் வளர்ச்சிக் குழு பாலர் பள்ளித் தமிழாசிரியர்களுக்கான கலந்தாய்வரங்கத்தை ஏற்பாடு செய்திருந்தது. 'ஆடுவோமே! கொண்டாடுவோமே!' என்பதே இக்கலந்தாய்வரங்கின் கருப்பொருளாகும். பாலர் பள்ளித் தமிழாசிரியர்கள் மகிழ்வூட்டும் கற்றல் கற்பித்தலின் வாயிலாக மரபையும் பண்பாட்டையும் வலியுறுத்துவது எப்படி என்பதை அறிந்துகொள்வதற்கு உதவும் தளமாக இக்கலந்தாய்வரங்கம் அமைந்திருந்தது. பிரதமர் அலுவலக அமைச்சர், இரண்டாம் நிதி அமைச்சர், இரண்டாம் கல்வி அமைச்சர், இரண்டாம் சட்ட அமைச்சர் குமாரி இந்திராணி ராஜா சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு சிறப்பித்ததோடு 'தேன்சிட்டு' என்னும் செயலியையும் அறிமுகம் செய்து வைத்தார். இச்செயலி மகிழ்வூட்டும் கற்றலுக்கு வழிவகுப்பதோடு நம் மரபையும் பண்பாட்டையும் வலியுறுத்தும் வண்ணம் உருவாக்கப்பட்டுள்ளது. திரு பாரதி கிருஷ்ணகுமார் இந்நிகழ்வில் முதன்மை உரையாற்றிச் சிறப்பு சேர்த்தார்.