தமிழ்மொழி கற்றல்
வளர்ச்சிக் குழு
Home > நிகழ்வுகள் > 2017 > தமிழ்ச் சுடர்

தமிழ்ச் சுடர்

தமிழ்ச்சுடர்: மீடியாகார்ப் தமிழ்ச் செய்தி & நடப்பு விவகாரப் பிரிவு வழங்கும் சமூக விருதுகள்.

தமிழ்ச்சுடர் 2017 மீடியாகார்ப் தமிழ்ச் செய்தி & நடப்பு விவகாரப் பிரிவு முதன்முறையாக ஏற்பாடு செய்திருந்த விருது நிகழ்ச்சி.
சிங்கப்பூரில் தமிழ் தொடர்ந்து நிலைத்திருப்பதற்கும் தழைத்தோங்குவதற்கும் குறிப்பிடத்தக்க வகையில் பங்களித்தவர்களை அங்கீகரிப்பதுதான் இந்நிகழ்ச்சியின் நோக்கமாகும்.
தமிழ்மொழி கற்றல் வளர்ச்சிக் குழு, இந்த நிகழ்ச்சியின் ஏற்பாட்டுக் குழுவுடன் இணைந்து செயலாற்றி வருகிறது.
கல்வி, கலை, மின்னிலக்கத் தொழில்நுட்பம், இளம் சாதனையாளர்கள், வாழ்நாள் சாதனையாளர் என 5 பிரிவுகளில் மொத்தம் 10 விருதுகள் வழங்கப்பட்டன.