தமிழ்மொழி கற்றல்
வளர்ச்சிக் குழு
Home > நிகழ்வுகள் > 2017 > முதலாம் ஆண்டு தொடக்கக் கல்லூரி/கல்வி நிலைய மாணவர்களுக்கான ஊடக அனுபவம்

முதலாம் ஆண்டு தொடக்கக் கல்லூரி/கல்வி நிலைய மாணவர்களுக்கான ஊடக அனுபவம்

தமிழ்மொழி கற்றல் வளர்ச்சிக் குழுவும் ஒலி96.8 வானொலி நிலையமும் இணைந்து, முதலாம் ஆண்டுத் தொடக்கக் கல்லூரி/கல்வி நிலைய மாணவர்களுக்காக ஊடக அனுபவத் திட்டத்தை ஏற்பாடு செய்தது.

இந்த நிகழ்ச்சி 3 கட்டங்களாக நடைபெற்றது. அவை, ஒருநாள் பயிலரங்கு, நிலையத்திற்குச் சென்று வானொலிப் படைப்பாளர்களின் பணியைக் கண்டறிதல், படைப்பாளர்களுடன் இணைந்து நிகழ்ச்சி படைத்தல் ஆகியவையாகும்.

ஒருநாள் பயிலரங்கில் வானொலி விளம்பரங்கள், நிகழ்ச்சிகள், செய்தி முதலியவற்றில் தமிழ்மொழியின் பயன்பாடு, சிங்கப்பூர் வானொலி நிலையத்தின் வரலாறு முதலியவற்றைப்பற்றி மாணவர்கள் அறிந்துகொண்டார்கள். வானொலிப் படைப்பாளர்கள் இந்தப் பயிலரங்கை ஆர்வமூட்டும் வகையில் வழிநடத்தினார்கள்.

இதற்கு அடுத்த கட்டமாக மாணவர்கள் படைப்பாளர்களின் அன்றாட பணிகளைக் கவனித்து அவர்களின் வேலை நுணுக்கங்களை அறிந்துகொண்டார்கள்.

இறுதிக் கட்டமாகப் படைப்பாளர்களுடன் மாணவர்கள் இணைந்து வானொலி நிகழ்ச்சிகளைப் படைத்தார்கள்

முதலாம் ஆண்டுத் தொடக்கக் கல்லூரி/கல்வி நிலைய மாணவர்களுக்கான ஊடக அனுபவம், மாணவர்கள் தங்களின் திறன்களை மேம்படுத்திக்கொள்ளவும் ஒலி96.8-இன் ஒலியலையில் நேயர்களுடன் நேரடியாக உரையாடவும் வாய்ப்பளித்தது. மேலும் தமிழ் தொடர்பான ஊடகத்துறை வேலை வாய்ப்புகளைப் பற்றியும் மாணவர்கள் அறிந்துகொண்டார்கள். முக்கியமாக மாணவர்கள் தமிழில் சரளமாகவும் தன்னம்பிக்கையுடனும் பேசுவதற்கான வாய்ப்பை இந்த ஊடக அனுபவத்திட்டம் ஏற்படுத்திக் கொடுத்தது.