தமிழ்மொழி கற்றல்
வளர்ச்சிக் குழு
Home > நிகழ்வுகள் > 2017 > தமிழோடு இணைவோம்; அழகே! தமிழே!

தமிழோடு இணைவோம்; அழகே! தமிழே!

தமிழோடு இணைவோம்; அழகே! தமிழே!

2017-இல் நிகழ்ந்த நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் நாடாளுமன்ற செயலாளர் குமாரி லோ இந்த முத்திரை நிகழ்ச்சியைப் பற்றி அறிவித்தார். அதைத் தொடர்ந்து தமிழ்மொழி கற்றல் வளர்ச்சிக் குழு இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தது. பிள்ளைகளும் பெற்றோர்களும் தமிழ்மொழியை ஆர்வத்தோடும் உற்சாகத்தோடும் பயன்படுத்திப் பயனடைய இந்த நிகழ்ச்சி உதவியது. அன்றாட வாழ்க்கையில் தமிழ்மொழியைப் பேசுவதற்குத் தயக்கம் காட்டும் பெற்றோர்களுக்கும் பிள்ளைகளுக்கும் இந்த நிகழ்ச்சி உறுதுணையாய் அமைந்தது. தொடக்கநிலை 4 மற்றும் 5ல் தமிழ்மொழி பயிலும் 35 மாணவர்களும் அவர்களின் பெற்றோர்களும் இந்த 2 நாள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்கள். பெற்றோர்-பிள்ளை பங்கெடுக்கும் வகையில் அறுசுவை அங்கம், இசைத் தமிழ், புதிர் அங்கம், எங்கள் மேடை, புதையல் வேட்டை முதலிய பல நடவடிக்கைகள் இடம்பெற்றிருந்தன. இவை பங்கேற்றவர்களின் ஆர்வத்தைத் தூண்டியதோடு பெற்றோர்-பிள்ளை இருவருக்கும் இடையேயுள்ள பிணைப்பை வலுப்படுத்தவும் உதவின. தமிழில் பேசுவதற்கும் தேவையான  உற்சாகத்தையும் அளித்தன. அதோடு, இந்நிகழ்ச்சி பள்ளி, வீடு, சமூகம் ஆகிய முத்தரப்பினருக்குமிடையே உள்ள உறவை வலுப்படுத்தவும் துணைபுரிந்தது.

இந்நிகழ்ச்சியில் பெற்றோர்களும் பிள்ளைகளும் இயல்பான சூழலில் பல நடவடிக்கைகளில் உற்சாகமாக ஈடுபட்டார்கள். இம்மாதிரியான நடவடிக்கைகளின்வழி பெற்றோர்களும் பிள்ளைகளும் தமிழ்மொழியை அன்றாட வாழ்க்கையில் எவ்வாறு எளிமையாகப் பயன்படுத்தலாம் என்பதை அறிந்துகொண்டார்கள். மேலும் இந்த நடவடிக்கைகள் பெற்றோர், பிள்ளை இருவருக்கும் இடையேயுள்ள பிணைப்பை வலுப்படுத்தியது.