தமிழ்மொழி கற்றல்
வளர்ச்சிக் குழு
Home > நிகழ்வுகள் > 2017 > தமிழோடு விளையாடு

தமிழோடு விளையாடு

தமிழோடு விளையாடு– தொடக்கநிலை மாணவர்களுக்கான சொல்வதெழுதுதல் போட்டி

இவ்வாண்டு, முதன்முறையாக அறிமுகப்படுத்தப்பட்டு நடத்தப்படும் இப்போட்டியில், ஒவ்வொரு பள்ளியைச் சேர்ந்த நால்வர் கொண்ட குழுக்கள் கலந்துகொண்டனர். இந்தப் போட்டிக்குப் பிரத்தியேகமாகச் செயலி ஒன்று தயாரிக்கப்பட்டது. செயலியில் மாணவர்கள் சொற்களை எழுத்துக்கூட்டித் தட்டச்சுச் செய்தனர். மேலும் அவர்கள் பிழையான சொற்களைத் திருத்தி, கலந்து கலந்து கொடுக்கப்பட்ட சொற்களைச் சரியாக வரிசைப்படுத்தி, படத்தில் இருக்கும் பொருள்களின் பெயர்களை ஊகித்து, உச்சரிக்கப்படும் சொற்களைக் கேட்டு, சரியாக எழுத்துக்கூட்டித் தட்டச்சுச் செய்ய வேண்டுமென்று எதிர்பார்க்கப்பட்டது. அதிகமான சரியாகச் சொற்களைத் தட்டச்சுச் செய்யும் குழுவுக்கு அதிகமான புள்ளிகள் கிடைத்தது.

இந்தப் போட்டியின் வழி மாணவர்கள் பல நன்மைகள் அடைந்தார்கள். மாணவர்கள் அவர்களது பள்ளிப் பாடத்திட்டத்தில் அறிமுகமாகாத பல புதிய சொற்களையும் கடினமான சொற்களையும் கற்றுக்கொண்டார்கள். இப்போட்டி மாணவர்களின் சொல்வளத்தைப் பெருக்கியது என்றும், கட்டுரை எழுதும் திறனை வளர்த்தது என்றும் மாணவர்களும் பெற்றோர்களும் ஆசிரியர்களும் கருத்துரைத்தார்கள். இப்போட்டி வெற்றிக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுக்காமல், கற்றலுக்கும் வழிவகுத்தது என்றால் அது மிகையாகாது.