தமிழ்மொழி கற்றல்
வளர்ச்சிக் குழு
Home > நிகழ்வுகள் > 2017 > பாலர் பள்ளித் தமிழாசிரியர்களுக்கான கருத்தரங்கு 2017

பாலர் பள்ளித் தமிழாசிரியர்களுக்கான கருத்தரங்கு 2017

பாலர் பள்ளித் தமிழாசிரியர்களுக்கான கருத்தரங்கு 2017

தமிழ்மொழி கற்றல் வளர்ச்சிக் குழுவின் பயிற்சி, வள உருவாக்கப் பணிக் குழுவின் ஏற்பாட்டில் முதன்முறையாகப் பாலர் பள்ளித் தமிழாசிரியர்களுக்கான கருத்தரங்கு மே 27-ஆம் தேதி நடைபெற்றது. இந்த முழுநாள் கருத்தரங்கு உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையத்தில் நடந்தது. 

பாலர் பள்ளி ஆசிரியர்கள், தமிழ்மொழியைக் கற்பிப்பதற்கு ஏதுவான வகுப்பறைச் சூழலை அமைப்பதற்கான சில வழிமுறைகளை இக்கருத்தரங்கின் மூலம் அறிந்து கொண்டனர். இவ்வாறான வகுப்பறைச் சூழல் பிள்ளைகள் தமிழ்மொழியை ஆர்வத்துடன் கற்று ஈடுபாட்டோடு பள்ளிக்கு அப்பாலும் தமிழ்மொழியைப் பயன்படுத்துவதற்கு வழிவகை செய்யும்.  சிங்கப்பூரில் தமிழ்மொழி வாழும் மொழியாக நிலைபெறுவதற்கும் இது துணைபுரியும்.

அர்த்தமுள்ள விளையாட்டின்வழி, பிள்ளைகள்  கற்பதற்கான உத்திகளும் அவர்களிடையே மொழியார்வத்தை வளர்ப்பதற்கான வழிகளும் இக்கருத்தரங்கில் பகிர்ந்துகொள்ளப்பட்டன. கதைகள், பாடல்கள், விளையாட்டுகள், திட்டப்பணிகள் ஆகியவற்றின்மூலம் பிள்ளைகளின் கற்றலை எவ்வாறு மேம்படுத்தலாம் என்பது குறித்துத் அவர்களது அனுபவங்களை எட்டுத் தமிழாசிரியர்கள் மற்ற ஆசிரியர்களோடு பகிர்ந்துகொண்டனர். 

சுமார் 150 பேர் இக்கருத்தரங்கில் கலந்துகொண்டு பயனடைந்தனர்.

  • மாணவர்களுக்கு எப்படி மேலும் ஆர்வமூட்டும் வகையில் கற்றுக்கொடுக்கலாம் எனக் கற்றுக்கொண்டேன்.
  • ஏட்டுக்கல்வியைத் தாண்டிப் பல்வேறு வழிகளில் கற்றல் நிகழலாம் என்பதைத் தெரிந்துகொண்டேன்.
  • இன்னும் பல புதிய உத்திமுறைகளை  என் வகுப்பில் பயன்படுத்த முடியும் என்பதை இந்தப் பட்டறை வாயிலாக நான் தெரிந்துகொண்டேன்.
  • கதையை எப்படி மாணவர்களின் கவனத்தை ஈர்க்கும் வண்ணம் ஆர்வமூட்டும் வகையில் சொல்லலாம் என்பதைக் கற்றுக்கொண்டேன்.